பொகவந்தலாவ பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் அதிகமாக மதுபானம் அருந்திய தோட்ட தொழிலாளர்கள் 30 பேர் நோய்வாய்ப்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிகிச்சை பெற்று 22 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், மேலும் 8 பேர் தொடர்ந்தும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இவர்களுக்கான சிகிச்சையில் குடல்புண் காரணமாகவே மேலதிக சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.


அதேவேளை தீபாவளி முன்னிட்டு மலையக நகர் பகுதிகளில் குறிப்பாக பொகவந்தலாவ, ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, தலவாக்கலை, நானுஓயா, நுவரெலியா போன்ற பெரும்பாலும் தழிழர்கள் வாழும் பிரதேசத்தில் மதுபானசாலைகளில் அதிகமான மது போத்தல்கள் வியாபாரம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.