மகளை துஷ்பிரியோகம் செய்தவனுக்கு தந்தை கொடுத்த தண்டனை ; அதிர்ச்சி தகவல்

Published By: Raam

20 Apr, 2016 | 07:38 PM
image

தனது மகளை துஷ்பிரயோகம் செய்த நபரின் இரண்டு கரங்களையும் தந்தையொருவர் வெட்டி வீசிய சம்பவமொன்று இந்தியாவின் பஞ்சாப்பில் , பதிந்தா நகரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 17 வயது இளைஞன் ஒருவரின் கைகளே வெட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் குறித்த இளைஞன் 7 மாத குழந்தையொன்றை துஷ்பிரயோகம் செய்துள்ளான் இது குறித்தான வழக்கு பதிந்தாவில் தற்போது நடந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையும் , குறித்த இளைஞனும் வழக்குக்காக நீதிமன்றம் வந்துள்ளனர்.

வழக்கு நிறைவடைந்த பிறகு குழந்தையின் தந்தையான பம்மா சிங் , குறித்த இளைஞனை நயவஞ்சகமாக பேசி சமாதனப்படுத்தி தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். 

பின்னர் ஒரு இடத்தில் அவரை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கி , மரத்தில் கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கியதோடு இரு கரங்களையும் வெட்டியுள்ளார்.

கரங்கள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் துடித்துக்கொண்டிருந்த இளைஞனை கிராமவாசிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பம்மா சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08