அமெ­ரிக்­கா­வா­னது ஈரா­னி­லுள்ள தீர்­மானம் எடுக்கும் குழுவில் ஆதிக்­கத்தைச் செலுத்த பாலியல், பணம் மற்றும் மேற்­கு­லக வாழ்க்கை முறை என்­ப­வற்றைப் பயன்­ப­டுத்­த­வ­தாக ஈரா­னிய உச்ச நிலைத் தலைவர் ஆய­துல்லாஹ் அலி கமெய்னி குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

ஈரான் தனது அணு­சக்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் மேற்­கு­லக அதி­கார சக்­தி­க­ளுடன் உடன்­ப­டிக்­கையை எட்­டி­ய­தற்கு பின்னர், மேற்­கு­லக ஆதிக்க அச்சம் தொடர்பில் பல ஊட­க­வி­ய­லா­ளர்­களும் புத்­தி­ஜீ­வி­களும் ஈரா­னிய அதி­கா­ரி­களால் கைது­செய்­யப்­பட்ட நிலை­யி­லேயே உச்ச நிலைத் தலை­வரின் இந்த விமர்­சனம் வெளியா­கி­யுள்­ளது.


"நாட்டில் ஆதிக்­கத்தைச் செலுத்த பணம் மற்றும் பாலியல் ஆகிய இரு பிர­தான விட­யங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அவை நம்­பிக்­கைகள், கண்­ணோட்­டங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் என்­ப­வற்றை மாற்றப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இதனால் பாதிக்­கப்­பட்ட ஒருவர் அமெ­ரிக்கர் சிந்­திப்­பது போன்ற அதே வழி­மு­றையில் சிந்­திக்கத் தலைப்படுகிறார்" என்று அவர் கூறினார்.


அவரது உரை அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.