வைத்தியர்களின் கவனயீனத்தால் சிசு பலி

Published By: Daya

12 Apr, 2019 | 11:06 AM
image

அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் தனது முதலாவது குழந்தையை பிரசவிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்தியர்களின் கவனயீனம் காரணமாக தனது குழந்தையை இழந்துள்ளார். 

குடாபோலன பகுதியை சேர்ந்தவர்  32 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவர், அம்பாந்தோட்டை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரிடம் தனியார் சேவையில் ஆலோசனைகளை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய குறித்த பெண் பிரசவித்திற்காக கடந்த 5 ஆம் திகதி அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அன்றைய தினத்திலிருந்து இன்று காலை வரை குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள் அவரை பரிசோதனை செய்யவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை குறித்த பெண் குழந்தையை பிரசவித்த போதும், அது உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. 

தனது குழந்தையை இழந்த மனவேதனையுடன் குறித்த பெண் தொடர்ந்து வைத்தியாசலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

வைத்தியரின்  கவனயீனத்தால் குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி குழந்தையின் தந்தை, அம்பாந்தோட்டை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02