ஜனாதிபதி காத்திருக்க தேவையில்லை - அஜித் பி.பெரேரா 

Published By: Vishnu

11 Apr, 2019 | 10:06 PM
image

(நா.தினுஷா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிகாலத்தை எந்த திகதியிலிருந்து கணிப்பிடுவது என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை அவர் பெற்றுக்கொள்வதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

அத்துடன் அத்தகைய அபிப்பிராயத்தை பெறுவதற்கு உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்னதாக புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளராக தயாசிறி தயாசேகர கூறியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் இன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் நிச்சயமாக 2020 ஜனவாரி மாதம் 8 ஆம் திகதியுடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவுக்கு வருகின்றது. ஆனால் இது குறித்து நீதிமன்ற ஆலோசனையை நாடுவது ஜனாதிபதியின் உரிமையாக கருதப்படுவதுடன் அது நாட்டின் எதிர்காலத்துக்கு ஏற்புடையதாகவும் அமையும். 

மேலும் ஜனாதிபதி தேர்தலைகண்டு தற்போது சுதந்திர கட்சி பின்வாங்குவதையும் அதற்கான வியூகங்களை வகுப்பதையும் காணகூடியதாக உள்ளது. ஆனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சியமாக தோல்வியடையும் அதேவேளை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி புதிய ஜனாதிபதியொருவர் பொறுப்பேற்பார் என்றும் இதன்போது உறுதியாக குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17