கேகாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கேகாலை புலத்கொஹுபிட்டிய பிரதான வீதியில் ஹெட்டிமுல்ல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிலுடன் மோதி நேற்றைய தினம் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து பலத்தகாயமடைந்த மோட்டார் சைக்கில் சாரதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 22 வயதுடைய கங்கிரிய வீதி, ஹெட்டிமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். 

விபத்துடன் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.