வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்ட சூப்பர் மாகாண தொடர்

Published By: Vishnu

11 Apr, 2019 | 08:07 PM
image

உலகக் கிண்ணத்துக்கான இலங்கை கிரிக்கெட் அணியை தேர்வு செய்யும் மாகாணங்களுக்கிடையேயான சூப்பர் மாகாண மட்ட இறுதிப் போட்டி வெற்றி தோல்வியின்றி மழையால் கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இத் தொடரானது கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இதில் தினேஷ் சந்திமால் தலைமையிலான கொழும்பு, திமுத் கருணாரத்ன தலைமையிலான கண்டி, மலிங்க தலைமையிலான காலி, மெத்தியூஸ் தலைமையிலான தம்புள்ளை போன்ற நான்கு அணிகள் மோதின.

இந் நிலையில் இதன் இறுதிப் போட்டி காலி ரங்கிரி மைதானத்தில் கொழும்பு மற்றும் காலி அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி அணியின் தலைவர் மலிங்க துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். அதன்படி முதலவதாக களமிறங்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை குவித்தது.

காலி அணி சார்பில் திரிமான்ன சிறப்பாக விளையாடி 115 ஓட்டங்களையும், தனஞ்சய டிசில்வா 32 ஓட்டத்தையும், குசல் மெண்டீஸ் 11 ஓட்டத்தையும், மிலிந்த சிறிவர்தன 32 ஓட்டத்தையும், அசரங்க 87 ஓட்டத்தையும், பானுக்க 21 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன் லஹிரு மதுசங்க 24 ஓட்டத்துடனும், தம்மிக்க பிரசாத் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் கொழும்பு அணி சார்பில் சுரங்க லக்மால், அசித பெர்னாண்டோ, செஹான் ஜெயசூரிய, சீகுகே பிரசன்ன மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதையடுத்து 338 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட கொழும்பு அணி அடுகளம் நுழையும் முன்னரே மழை பெய்யத் தொடங்கியது. அத்துடன் நீண்ட நேரம் மழை விடாது பொழித காரணத்தினால் போட்டி வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்டது.

இத் தொடரின் சிறந்த வீரராக காலி அணியின் தனஞ்சய டிசில்வாவும் (160 runs + 3 wickets), சிறந்த துடுப்பாட்ட வீரராக தம்புள்ளை அணியின் தலைவர் மெத்தியூஸும் (227 runs), சிறந்த பந்து வீச்சாளராக காலி அணியின் தலைவர் மலிங்கவும் (8 wickets) தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை இத் தொடரில் வீரர்கள் வெளிக்காட்டிய திறமைக்கு அமைவாக எதிர்வரும் நாட்களில் இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணிக் குழாமில் வீரர்கள் தெரிவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35