கோத்தாபய களமிறங்கினால் எமக்கு வெற்றி உறுதியாகும் - ஐ.தே.க.

Published By: Vishnu

11 Apr, 2019 | 06:38 PM
image

(ஆர்.யசி)

கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை, கோத்தாபய ராஜபக்ஷவை நெருக்கடிக்குள் தள்ளும் எந்த சூழ்ச்சியையும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

முன்னாள் பாதுகாப்பு  செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள சிவில் வழக்குகள் அந்நாட்டு பிரஜை ஒருவரால் தொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அமெரிக்க பிரஜை ஒருவர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும். ஆகவே இது குறித்து இலங்கை எந்த விதத்திலும் தொடர்புபடப்போவதில்லை. ஐக்கிய தேசிய கட்சிக்கும் இந்த சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இலங்கையில் அவருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இவை அனைத்துமே சுயாதீனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் அவற்றில் எந்த தலையீடுகளும் இல்லாது நாம் செயற்பட்டு வருகின்றோம். 

அதேபோல் கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரா இல்லையா என்பது குறித்து மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணிக்குள் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு அவர் களமிறக்கப்படுவார் என்றாலும் கூட அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தகுதியான வேட்பாளர் ஒருவரை நாம் தெரிவு செய்து களமிறக்க தயாராக உள்ளோம். சிங்கள மக்களை மட்டுமேயல்லாது தமிழ் முஸ்லிம் மக்களையும் பாதுகாக்கும் வகையில் அவர்களின் ஆதரவையும் பெரும் வேட்பாளரை நாம் களமிறக்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49