மட்டக்களப்பு சிவபுரத்தில்  கிராமசேவை உத்தியோகத்தர் கொல்லப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமான சூத்திரதாரிகளை  சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று புதன்கிழமை (20) கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று அமைதியன முறையில், முன்னெடுக்கப் பட்டிருந்தது.

கடந்த 15.04.2016 சனிக்கிழமை இரவு மர்மமான முறையில் கிராமசேவை உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். 

குறித்த கிராம சேவை உத்தியோகத்தரின், மரணச் சடங்கு மகிழுரில் உள்ள அன்னாரது இல்லத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்று பின்னர் அவர் கடமை புரிந்த மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திகு அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்நிலையில் புதன் கிழமை காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கடமை புரிம், பிரதேச செயலாளர் கலநிதி.எம்.கோபாலரெத்தினம். அரச உத்தியோகஸ்தர்கள், அகில இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள், அனைவரும் கறுப்பு பட்டி பதாகைகளை ஏந்தியவாறு அமைத்தியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மரணமடைந்த எமது சக உத்தியோகஸ்தரின் மரண விசாரணையைத் துரிதப்படுத்துங்கள், இனிமேலும் இந்த இரத்த வெறியாட்டம் வேண்டாம்,  அரசே கிரம உத்தியோகஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கு, பொதுமக்கள் சேவகனுக்கு கிடைத்த பரிசா இது, கயவர்களைக் கைது செய், போன்ற பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை எந்தியவாறு பிரதேச செயலகத்திலிருந்து களுவாஞ்சிகுடி நகர் வரைச் சென்று தமது எதிர்ப்பை வெளிக் காட்டினர்.