தடுத்து நிறுத்தப்பட்ட படையினருக்கான நில அளவை நடவடிக்கை 

Published By: Digital Desk 4

11 Apr, 2019 | 05:02 PM
image

யாழ்ப்பாணம், மண்டைதீவில் கடற்படையினர் நிலைகொள்வதற்காக பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்காக இன்று நடைபெறவிருந்த நில அளவை நடவடிக்கை எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. 

இன்று காலை 9 மணியளவில் மண்டைதீவு கிழக்கு அம்மன் கோவில் முன்பாக நடைபெற்ற போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவது. 

வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் அப்பகுதியில் உள்ள சுமார் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர், 10 பேர்ச்சஸ் காணியை ஆக்கிரமித்து அதில் முகாமிட்டுள்ளனர். 

குறித்த படைமுகாம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரித்து படை முகாமினை விஸ்தரிப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர். 

இந்நடவடிக்கையில் முதற்கட்டமாக குறித்த காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்கான முன்னெடுப்புக்களை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

இதன்படி குறித்த காணிகளை சுவீகரிக்கப் போவதாகவும், அதற்கான நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் நில அளவைத் திணைக்களத்தினால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

குறித்த அறிவிப்பின்படி இன்று வியாழக்கிழமை அக் காணிகள் நில அளவை செய்யப்படவுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காணி சுவீகரிப்புக்கான நில அளவை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து நில அளவையை தடுத்து நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தினையடுத்து காணி சுவீகரிப்புக்காக நில அளவை செய்யவந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பால் நில அளவை செய்யாமல் திரும்பிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46