ஜப்பானில் போர் விமானம் கடலில் விழுந்து நொருங்கியது - விமானியின் நிலை என்ன?

Published By: Daya

11 Apr, 2019 | 10:30 AM
image

ஜப்பானில் ‘எப்-35’ போர் விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளனாது. விமானத்தில் சென்ற விமானியின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

ஜப்பானின் ஹோன்சு மாகாணத்தில் உள்ள மிசாவா நகரில் விமானப்படைத் தளம் உள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் மாலை ‘எப்-35’ ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விமானத்தில் விமானியைத் தவிர வேறுயாரும் இல்லை.

விமானம் புறப்பட்டுச் சென்ற ½ மணி நேரத்துக்குப் பின்னர் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்நிலையில், ‘எப்-35’ போர் விமானம் பசிபிக் கடல் பகுதியில் விழுந்து நொருங்கியது தெரியவந்தது. நேற்று அதிகாலையில் அந்த விமானத்தின் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டன. அதே சமயம் விமானத்தில் சென்ற விமானியின் கதி என்ன ஆனது? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த விமானம் விமானப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47