வலைபந்தாட்டத்தில் மலேசியாவிடம் பணிந்தது இலங்கை

Published By: Vishnu

10 Apr, 2019 | 11:14 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான அழைப்பு சர்வதேச வலைபந்தாட்டப் போட்டியில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்ட இலங்கை அணி 47 க்கு 39 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணிக்கு இறுதி வீராங்கனைகளைத் தெரிவு செய்யும் பொருட்டு வலைபந்தாட்ட வீராங்கனைகளின் ஆற்றல்களைப் பரிட்சிக்கும் வகையில் இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு அணிகளுக்கு இடையிலான அழைப்பு சர்வதேச வலைபந்தாட்டப் போட்டி கொழும்பில் நடைபெற்றுவருகின்றது.

ஆரம்பப் போட்டியில் கென்யாவிடம் தோல்வி அடைந்த இலங்கை மூன்றாம் நாளான இன்று மலேசியாவிடமும் தோல்வி அடைந்து பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது. இலங்கை இளையோர் அணியை மாத்திரமே இலங்கை வெற்றிகொண்டது.

சிங்கப்பூரில் கடந்த வருடம் ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளில் மலேசியாவை கிண்ணத்துக்கான லீக் சுற்றில் 62 க்கு 59 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட இலங்கை அணி, இன்றைய போட்டியில் மலேசியாவின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வி கண்டது.

முதலாவது கால் மணி நேர ஆட்டப் பகுதியில் 11 க்கு 9 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை முன்னிலையில் வகித்தபோது இலங்கை வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது.

ஆனால் அடுத்த மூன்று கால் மணி நேர ஆட்டப் பகுதிகளையும்   13 க்கு 11, 12 க்கு 8, 13 க்கு 9 என்ற கோல்கள் கணக்கில் தனதாக்கிய மலேசியா போட்டியில் 47 க்கு 39 என வெற்றிபெற்றது.

அவுஸ்திரேலியாவில் தொழில்சார் கழகமட்ட வலைபந்தாட்டப் போட்டிகளில் தர்ஜினி சிவலிங்கம் விளையாடி வருவதால் இந்த அழைப்பு சர்வதேச போட்டியில் அவர் பங்குபற்றவில்லை. இது இலங்கை அணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. மேலும்  தடுத்தாடுவது, பந்தபரிமாற்றம், கோல்போடுவது அனைத்திலும் இலங்கை வீராங்கனைகள் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டனர். 

இப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற இலங்கை இளையோர் அணியுடனான போட்டியில் 83 க்கு 23 என்ற கோல்கள் அடிப்படையில் கென்யா வெற்றிபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41