தங்காலை - மாத்தறை பிரதான வீதியின் பஹஞ்சாவ பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தள்ளதுடன் மேலும்  ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் 19 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.