கஞ்சிபானை இம்ரானின் சகாவான மொஹமட் பைஸருக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

10 Apr, 2019 | 03:19 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கஞ்சிபானை இம்ரானின் சகா, மொஹமட் பைஸாரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

24 மணி நேர மேலதிக தடுப்புக் காவல் விசாரணையின் பின்னர் சந்தேக நபரான மொஹமட் பைஸரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதிவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர் செய்தனர். 

இதன்போதே நீதிவான் அவரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் டுபாயிலிருந்து  பைஸருடன் நாடு கடத்தப்பட்ட, மொஹமட் முபார் மொஹமட் ஜபீருக்கு எதிராக எவ்வித குற்றச்செயல்களும் பதிவாகவில்லை என்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் விடுவிக்கப்பட்டார். 

எனினும், 37 வயதான மொஹமட் நஸீம் மொஹமட் பைஸர் என்பவர் தொடர்பில் 48 மணி நேர விஷேட விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் நேற்று மேலும் 24 மணி நேரம் தடுப்புக் காவல்  உத்தரவும் பெறப்பட்டு  கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

மொஹம்மட் பைசர் எனும் மதூஷ் மற்றும் கஞ்ஜிபானை இம்ரானின் சகா, 2018.08.26 அன்று மாளிகாவத்தையில் பெண் ஒருவரை சுட்டுக் கொலைச் செய்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் எனவும், 2018.9.12 அன்று மாளிகாவத்தை லக்செத்த செவன வீட்டுத் திட்டம் அருகே ஒருவரை சுட்டுக் கொலைச் செய்ய முயன்ற சம்பவத்தின் துப்பாக்கிதாரி என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

அது தொடர்பிலேயே மொத்தமாக 72 மணி நேரம் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்த விசாரணைகளின் போது இவ்விரு கொலை, கொலை முயற்சி சம்பவங்கள் கஞ்சிபானை இம்ரானின் உத்தரவுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலான சான்றுகளும் மேலும் பல விடயங்களும் வெளிபப்டுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51