கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை முதலிடம்

Published By: Vishnu

09 Apr, 2019 | 11:55 PM
image

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தினேஷ் கார்த்திக்  தல‍ைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிக்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை குவித்தது.

109 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி சார்பில் வேட்சன் மற்றும் டூப்பிளஸ்ஸி ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாடி வந்த வேளை வேட்சன் 2.2 ஆவது ஓவரில் 17 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ரய்னாவும் 14 ஓட்டத்துடன் 4 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஆட்டமிழக்க சென்னை அணி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

3 ஆவது விக்கெட்டுக்காக ராயுடு மற்றும் டூப்பிளஸ்ஸி கைகோர்த்தாடி வர சென்னை அணி முதல் 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 57 ஓட்டங்களை பெற்றது.

ராயுடு மற்றும் டூப்பிளஸ்ஸி தலா 12 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வந்தனர். இந் நிலையில் 14.4 ஆவது ஓவரில் ராயுடு 21 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து கேதர் யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாட சென்னை அணி 16.4 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடந்ததுடன் 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து கொல்கத்தா அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை‍ அடைந்தது. 

ஆடுகளத்தில் டூப்பிளஸ்ஸி 43 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரேன் 2 விக்கெட்டுக்களையும்  சாவ்லா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றி மூலம் சென்னை அணி பட்டியல் தர வரிசையில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58