முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி பிள்ளையான் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டடிருந்தார்.

இந்நிலையிலே் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.