அமெரிக்காவின் பிடியிலிருந்து நாட்டை  மீட்க மைத்திரி,மஹிந்த ஒன்றிணைய வேண்டும் - குணதாச  அமரசேகர

Published By: R. Kalaichelvan

09 Apr, 2019 | 06:09 PM
image

(ஆர்.விதுஷா)

வெளிநாட்டவர்களின்  ஆதிக்கத்திலிருந்து நாட்டை மீட்டு  நாட்டு மக்களுக்காக செயற்படும்  ஒரு  அரசாங்கத்தினை  பலமான முறையில் உருவாக்குவதற்கு  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும்,ஸ்ரீலங்கா  பொது  ஜன முன்னணியினரும்  ஒன்றிணைய வேண்டும்  என தெரிவித்த  தேசிய  ஒருங்கமைப்பு  ஒன்றியத்தின்  தலைவர் குணதாச அமரசேகர  இவ்விரு கட்சிகள் மட்டுமன்றி  அனைத்து சிறிய கட்சிகளும் கட்சி  பேதங்களை  மறந்து நாட்டின் ஜனநாயகத்திற்காக ஒன்றிணைய  வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

 

தேசிய அமைப்புக்களுக்கான  பொது நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற  ஊடக  சந்திப்பின் போதே மேற்கண்டவாறு  தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,  

நாட்டின் தற்போதைய நிலையை எடுத்து கொண்டால் வெளிநாட்டவர்களின்  ஆதிக்கத்திற்கு  உட்பட்ட  நிலையில் காணப்படுகின்றது. அவ்வாறாக கடந்த காலங்களிலும் கூட,மனித உரிமைகள்  பேரவையின்  செயற்பாடகளும்  எமது நாட்டை  கட்டுப்படுத்தி  தமது  ஆதிக்கத்திற்கு  கீழ கொண்டு செல்லும்  வகையிலேயெ  அமையப்பெற்றிருந்தன.

அத்துடன்  தற்போதைய  ஐக்கிய  தேசியக்கட்சி  அரசாங்கமும் வெளிநாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு  ஆதரவு வழங்கும்  செயல்களையே  மேற்கொண்டும்  வருகின்றது.  

அந்த வகையில் நோக்கும் போது ,அமெரிக்க  நிறுவனமான     அமெரிக்கன் சலெஞ்  கோப்பரேசன் என்னும்  நிறுவனம்    பிரதமரின்  உத்தியோக  பூர்வ  வாசத்தலத்தில்  நிறுவப்பட்டுள்ளதுடன், நாட்டின்  நிலப்பரப்ப  தொடர்பான  சட்டங்களை  முடிக்கும் வகையிலான  ஒப்பந்தமொன்றிலும்  அரசாங்கம்  கைச்சாத்திடவுள்ளது.  

இத்தகைய  செயற்பாடுகளினூடாக   நாடு  முழுமையாக  வெளிநாட்டவர்களின்  ஆதிக்கத்திற்கு  உட்படும்  தர்பாக்கிய  நிலைக்கு  தள்ளப்பட்டள்ளது.

இவ்வாறான  நிலையில்  ஜக்கியதேசிய கட்சி  அரசாங்கத்தை  தொடர  விட்டோமேயானால்  எதிர்காலத்தில்  நாடு  பாரிய விளைவுகளை  சந்திக்க  நேரிடும் எனவும்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08