ரோசாசியா (Rosazea) என்ற குறைபாட்டிற்கான சிகிச்சை

Published By: Digital Desk 4

12 Apr, 2019 | 01:24 PM
image

எம்மில் பலர் இளமையாக இருக்கும் பொழுது சிரித்தால் கன்னத்தில் குழி விழும். இதனைப் பார்த்து ரசித்து இருக்கிறோம். சிலர் சிரிக்கும் போதும்,  அபூர்வமாக வெட்கப்படும் போதும் கன்னங்கள் சிவந்து விடும், இதை நாம் ரசித்தாலும், இது ஒரு தோலில் ஏற்பட்ட குறைபாடு என்றும், இந்த பாதிப்பிற்கு ரோசாசியா என்றும் குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள்.

சிரிக்கும்போது முகத்தில் உள்ள தசைகள் விரிவடைகின்றன. அப்படி விரிவடையும் போது அங்கு உள்ள இரத்த நாளங்கள் இயல்பை விட அதிக அளவில் குவிவதால் அப்பகுதியில் சிவந்து விடுகின்றன. 

இது தோலின் அடிப்பகுதியில் அதாவது பல்வேறு அடுக்குகளைக் கொண்ட தோலின் மேல் பகுதியில் உண்டாகும் மாற்றமே இதற்குக் காரணம். இதற்கு துல்லியமான மருத்துவ சிகிச்சை முழுமையாக கண்டறியப்பட வில்லை என்றாலும், ரோசாசியா தெரபி என்ற சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் அளிக்கப்படுகிறது.

இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீரை பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  சிலருக்கு சோற்று கத்தாழை என்ற மூலக்கூறைக் கொண்டு செய்யப்படும் களிம்புகளை பயன்படுத்தலாம். சிலருக்கு பூப்பெய்தியவுடன் கண்களில் சிறிய பாதிப்புகளோ அல்லது மூக்கின் அமைப்பில் வேறுபாடுகயோ ஏற்பட்டால் அவர்களுக்கு இந்த ரோசாசியா பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் தோல் மருத்துவர்களை அணுகி ஆலோசனைப் பெறவேண்டும். அத்துடன்  இதனை தூண்டும் உணவு வகைகளை தவிர்த்து விற்றமின், ஏ விற்றமின் பி3, புரோபயாடிக்ஸ், புதினா டீ, கிரீன் டீ ஆகியவற்றை உணவு உணவில் சேர்த்தால் இதனை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.

டொக்டர் மோத்தி ராம்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04