அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மட்டக்களப்பு பாசிக்குடா பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி செனன் - வூட்லேண்ட் பகுதியில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

மழையினால் வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

 

சாரதி மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் இருவர் அடங்கலாக ஐந்து பேர் பயணித்துள்ளனர். எனினும் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த கார் மட்டக்களப்பு பாசிக்குடா பகுதிக்கு குடும்பத்தாருடன் சுற்றுலா பயணம் சென்று மீண்டும்  வீட்டிற்கு செல்வதற்காக அட்டன் நோக்கி சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.