எந்த தடை வந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய பணியை முன்னெடுப்பேன்  ; வடக்கு ஆளுநர் 

Published By: Digital Desk 4

09 Apr, 2019 | 02:44 PM
image

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வடமாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். 

யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில்  ஆளுநர் தலைமையில் நேற்று (08) பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 91 அலுவலக உதவியாளர்கள் , 4 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (குடிசார்) மற்றும் 11 குடியேற்ற அலுவலர்கள் உள்ளிட்ட 106 உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

 இந்த நிகழ்வில் உரையாற்றும் போது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இங்கு ஆளுநர்  மேலும் குறிப்பிடுகையில், 

இந்த நியமனக்கடிதம் வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் இந்த தேசத்தை கட்டியெழுப்ப போகவுள்ள ஆரம்ப பணியை செய்யப்போகும் மக்கள் நீங்கள். ஒரு நிறுவனத்தில் காரியாலய சேவகளை சந்தித்தே நிறுவனத்தின் தலைவரை சந்திக்கின்றனர்.

 எனவே மக்களுக்கும் அரசுக்கும் மத்தியிலுள்ள சிறந்த பாலமாக நீங்கள் இருக்கவேண்டும். அரசியல் விடயங்களை புறந்தள்ளி மனிதாபிமானத்துடனும் இறை பயத்துடனும் உங்கள் தொழிலை நீங்கள் செய்வீர்கள் என்று விண்ணப்பம் வைக்கின்றேன் என ஆளுநர்  குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08