உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி தெரிவிற்கும் ஐ.பி.எல்.லிற்கும் தொடர்பில்லை - தெரிவுக்குழு

Published By: Rajeeban

09 Apr, 2019 | 03:07 PM
image

ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள் விளையாடும் விதத்தினை அடிப்படையாக வைத்து  உலக கிண்ணப்போட்டிகளிற்கான இந்திய அணியை தெரிவுசெய்யப்போவதில்லை என இந்திய தெரிவுக்குழுவின தலைவர்  எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ணப்போட்டிகளிற்கான  இந்திய அணி 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண அணிக்கான தெரிவில் ஐ.பி.எல். அதிக தாக்கம் செலுத்தாது என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஐ.பி.எல்.லில் வீரர்கள் விளையாடும் விதத்தை வைத்து வீரர்கள் தெரிவுக்குழு குறித்து சிந்திக்கவில்லை என பிரசாத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இது குறித்து தெளிவாகயிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக  உலக கிண்ணப்போட்டிகளிற்கான வீரர்கள் தெரிவின் போது  ஐ.பி.எல்.லில் வீரர்கள் விளையாடும் விதத்தினை கருத்தில் கொள்ளக்கூடாது என ரோகித்சர்மா வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண போட்டிகளிற்கு வீரர்களை தெரிவு செய்யும்போது ஐ.பி.எல். போட்டிகளை அடிப்படையாக வைத்து தெரிவு செய்யக்கூடாது கடந்த நான்கு வருடங்களில் வீரர்கள் விளையாடிய விதத்தை வைத்து தெரிவு செய்யவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களில் நாங்கள் பல போட்டிகளில் விளையாடியுள்ளோம் வீரர்களை தெரிவு செய்ய இதுவே போதுமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20