பெண் பொலி­ஸா­ருக்கு தொலை­பே­சியில் தொல்­லை­கொ­டுக்கும் பொலிஸ் அதி­காரி.!

Published By: Robert

20 Apr, 2016 | 08:56 AM
image

பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு தொல்லை கொடுக்கும் கிழக்கின் உயர் பொலிஸ் அதி­காரி ஒரு­வ­ருக்கு எதி­ராக உட­ன­டி­யாக விசா­ரணை நடத்தி இரு­வா­ரங்­க­ளுக்குள் அறிக்கை சமர்­ப்பிக்­கு­மாறு கிழக்கு மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்க உத்­த­ர­விட்­டுள்ளார். அம்­பாறை மாவட்­டத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் டீ.ஆர்.எல். ரண­வீ­ர­வுக்கே இது குறித்த விசா­ர­ணை­களை நடத்­து­மாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்க உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.

பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலர் பொலிஸ் ஆணைக்குழு­வுக்கு செய்­துள்ள முறைப்­பாட்டின் பிர­தி­யொன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரி­யா­ல­யத்­துக்கு கிடைத்­ததை அடுத்தே இது குறித்த விசா­ர­ணை­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு ஆரம்­பிக்­கப்படும் விசா­ர­ணை­களில் குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுக்கத் தக்க ஏதேனும் குற்றச் சாட்­டுக்கள் வெளிப்­படின் அதன் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் அவர் தொடர்ந்தும் குறித்த உயர் பத­வியில் இருப்­பது விசா­ர­ணைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­து­மாயின் அவரை உட­ன­டி­யாக இட­மாற்றம் செய்­யவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­க­வினால் விசா­ரணை அதி­கா­ரி­யான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ரண­வீ­ர­வுக்கு ஆலோ­சனை வழங்­கப்பட்­டுள்­ள­தா­கவும் அறிய முடி­கி­றது.

இது குறித்து மேலும் அறிய முடி­வ­தா­வது,

குறித்த உயர் பொலிஸ் அதி­காரி கடந்த டிசம்பர் மாதமே கிழக்கு மாகா­ணத்­துக்கு இட­மாற்றம் பெற்று சென்­றுள்ளார். பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையில் உள்ள இரு­வ­ருடன் சேர்ந்து அந்த அதி­காரி பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு தொல்லை கொடுப்­ப­தா­கவும் இரவு வேளை­களில் தொலை­பேசி அழைப்­புக்கள் மற்றும் குறுஞ்­செய்­தி­களை அனுப்­பு­வதால் பல பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் தங்­க­ளது தொலை­பேசி இலக்­கங்­களை மாற்­றி­யுள்­ள­தா­கவும் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்­பட்­டுள்ள முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி பொலிஸ் நிலையம் ஒன்றில் இடம்­பெற்ற மாதாந்த சோதனை நட­வ­டிக்கை ஒன்றின் போது, இந்த பொலிஸ் அதி­காரி தனது இடுப்புப் பட்­டியை கழற்றி பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரிடம் கொடுத்­துள்­ள­தா­கவும் அதனால் அந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் கடும் மன உளைச்­ச­லுக்கு உள்­ள­ாகி­ய­தா­கவும் முறைப்­பாட்டில் சுட்­டிக்­காட்­டப்பட்­டுள்­ளது.

இதனை விட, குறித்த உயர் அதி­காரி பாட நெறி­யொன்றை முன்னெடுக்கும் நிலையில், அதற்கான ஒப்படைகளை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வைத்து செய்வதாகவும் அந்த கான்ஸ்டபிளின் சொந்த செலவில் அதன் பிரதிகள் எடுத்துக்கொள்வதாகவும் அது குறித்தும் விசாரணை செய்யுமாறும் முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08