அசராது போட்டியை முடித்து வைத்தார் ராகுல்

Published By: Vishnu

08 Apr, 2019 | 11:47 PM
image

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 22 ஆவது லீக் போட்டி சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையில் இன்றிரவு 8.00 மணிக்கு மொகாலியில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணியின் தலைவர் அஷ்வின் களத்தடுப்பை தேர்வுசெய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 150 ஓட்டங்களை குவித்தது.

151 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான கிறிஸ் கெய்ல் 3.1 ஓவரில் ரஷித் கானுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனால் ஐதராபாத் அணியின் முதல் விக்கெட் 18 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது. எனினும் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்தாடிய கே.எல். ராகுல் மற்றும் அகர்வாலின் பொறுப்பான இணைப்பாட்டத்தினால் பஞ்சாப் அணி முதல் ஐந்து ஓவர்களில் 30 ஓட்டத்தையும் 10 ஓவர்களின் முடிவில் 102 ஓட்டங்களையும் பெற்றது.

அத்துடன் ராகுல் 34 பந்துகளை எதிர்கொண்டு 6 நான்கு ஓட்டம், ஒரு நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் விளாசினார். மறுமுணையில் அகர்வால் 16.2 ஆவது ஓவரில் 40 பந்துகளை எதிர்கொண்டு அவரும் அரை சதமொன்றை பூர்த்தி செய்தார்.

எனினும் அவர் 18 ஆவது ஓவரின் முதல் பந்தில் சண்டீப் சர்மாவுடைய பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த மில்லரும் அதே ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் அணி 135 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து.

அவர்களின் ஆட்டமிழப்பையடுத்து மண்டீப் சிங் களமிறங்க, பஞ்சாப் அணிக்கு ஒரு கடத்தில் வெற்றிக்கு 12 பந்துகளில் 16 ஓட்டம் என்ற நிலையிருக்க மண்டீப் சிங் 18 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் போட்டியின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. தொடர்ந்து சாம் கர்ரன் ஆடுகளம் புக, பஞ்சாப் அணிக்கு 6 பந்துகளுக்கு 11 ஓட்டம் என்ற நிலையிருந்தது.

இறுதியாக ராகுல் 19.5 ஆவது பந்தில் போட்டியை முடித்து வைத்தார். அதன்படி ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது.

ஆடுகளத்தில் ராகுல் 71 ஓட்டத்துடனும், சாம் கர்ரன் 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் சண்டீப் சர்மா 2 விக்கெட்டுக்களையும், சித்தார்த் கவுல் மற்றும் ரஷித் கான் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35