கோத்தாபாய வந்தால் நிச்சியமாக தோற்கடிப்போம்  ; ஐக்கிய தேசிய கட்சி

Published By: Digital Desk 4

08 Apr, 2019 | 09:52 PM
image

(நா.தினுஷா)

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்கு இம்முறை சுதந்திர கட்சி பாரிய சவாலை ஏற்படுத்தும். ஜனாதிபதி விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனதிபதி தேர்தல் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

அதேபோன்று தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதுடன் கோத்தாபய ராஜபக்ஷவை நிச்சியமாக தோற்கடிப்பார் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் உட்க்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பஅமைச்சின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய அமைச்சர் அஜித் பி.பெரேரா குறிப்பிடுகையில்,

இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பரந்தப்பட்ட முன்னணியாக களமிறங்வும் ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து பங்காளி கட்சிகளும் தீர்மானித்துள்ளன. இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் யார் என்பதை அறிந்துக்கொள்வதில் கட்சிக்குள்ளேயும் நாட்டுமக்களிடையேயும் ஆர்வம் காணப்படுகின்றது. இருப்பினும் இம்முறை தேர்ந்தெடுக்க வேண்டிய ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து முக்கிய அவதானம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

 எதிர்தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை களமிரக்க தீர்மானித்திருப்பினும் அவரது அமெரிக்க குடியுரிமையின் காரணமாக அவரை வேட்பாளராக களமிறக்குவதில் சவால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவாராக இருந்தால் அது ஐக்கிய தேசிய முன்னணிக்கு சாதகமாகவே அமையும். அவரை மிக இலகுவாக எம்மாள் தோற்கடிக்க முடியும்.

எனவே கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவதில் ஆளும் தரப்புக்கு எந்த ஐயப்பாடும் இல்லை. அதேபோன்ற சுதந்திர கட்சியினதும் பொதுஜன முன்னணியினதும் கூட்டணி சாத்தியமற்றதாகும். காரணம் சுதந்திர கட்சி மஹிந்த தரப்புடன் இணைந்து செயற்பட தயார் இல்லை என்ற நிலைபாட்டிலேயே உள்ளது. எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சி பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளுக்கு பாரிய சவாலினை ஏற்படுத்தும் எனறே எதிர்பார்க்கிறோம்.

அதேபோன்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தன. ஆனால் இன்னும் எங்களின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இன்னும் உத்திடியோக பூர்வமாக தீர்மானிக்க வில்லை.

தேர்தலுக்கு அறிவித்ததன் பின்னரே வேட்பாளரை தெரிவு செய்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. ஆனால் இம்முறை தெரிவு செய்யப்படுபவர் நிச்சிமாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் அல்லது கட்சியை சார்நத்வராகவே இருப்பார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04