வோர்னரின் அரைசதத்துடன் 150 ஓட்டங்களை குவித்த ஐதராபாத்

Published By: Vishnu

08 Apr, 2019 | 11:04 PM
image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வோர்னரின் 70 ஓட்டத்துடன் ஐதராபாத் அணி 150 ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 22 ஆவது லீக் போட்டி சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கிடையில் இன்றிரவு 8.00 மணிக்கு மொகாலியில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணியின் தலைவர் அஷ்வின் களத்தடுப்பை தேர்வு செய்தார். சன் ரைசர்ஸ் அணியின் ஆரம்ப வீரர்களான டேவிட் வோர்னர் மற்றும் ஜோனி பெயர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட, ஐதராபாத் அணியின் முதல் விக்கெட் 7 ஓட்டத்துக்கு வீழ்த்தப்பட்டது.

ஜோனி பெயர்ஸ்டோ 2.4 ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடன் முஜிபுர் ரஹ்மானின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, தவான் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கினார்.

டேவிட் வோர்னர் மற்றும் தவான் இருவரும் தொடர்ந்தும் நிதமான மான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிரடியின்றி ஐதராபாத் அணி முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

விஜய் சங்கர் 21 ஓட்டத்துடனும், வோர்னர் 20 ஓட்டத்துடனும் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வர 10.4 ஓவரல் ஓவரில் விஜய் சங்கர் 21 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மொஹமட் நபி 13.2 ஆவது ஓவரில் 12 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இதனால் ஐதராபாத் அணி 80 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

அதையடுத்து நான்காவது விக்கெட்டுக்காக களமிறங்கிய மணீஷ் பாண்டேயுடன் டேவிட் வோர்னர் கைர்த்து அதிரடி காட்ட ஆரம்பிக்க ஐதராபாத் அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 100 ஓட்டங்களை பெற்றுதுடன், டேவிட் வோர்னர் 15 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அரைசதம் கடந்தார்.

இறுதியாக ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் டேவிட் வோர்னர் 70 ஓட்டத்துடனும் ஹுடா 14 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதனால் பஞ்சாப் அணியின் வெற்றியிலக்கு 151 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் அஷ்வின், மொஹமட் ஷமி மற்றும் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49