ஆப்­கா­னிஸ்­தா­னிய தலை­நகர் காபூலில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற பாரிய குண்டு வெடிப்பில் குறைந்­தது 30 பேர் பலி­யா­ன­துடன் 327 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யொ­ருவர் வெடி­பொ­ருட்கள் நிரப்­பப்­பட்ட வாக­னத்தை பயன்­ப­டுத்தி இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக அந்­நாட்டு உள்­துறை அமைச்சு தெரி­வித்­தது. மேற்­படி தாக்­கு­தலின் போது துப்­பாக்கிச் சூட்டு சத்­தங்­களும் கேட்­ட­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

தமது குழு­வி­னரே இந்தத் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக தலிபான் தீவி­ர­வா­திகள் உரிமை கோரி­யுள்­ளனர். பாது­காப்பு அமைச்சுக் கட்­டடம் மற்றும் இரா­ணுவ வளா­கங்கள் அமைந்­தி­ருந்த பிராந்­தி­யத்­துக்கு அண்­மை­யி­லுள்ள குடி­யி­ருப்புப் பிர­தே­சத்தில் சன­சந்­த­டி­மிக்க காலை வேளை இந்தக் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் தலிபான் தீவி­ர­வா­திகள் அந்­நாட்டின் பிர­தான உளவு முகவர் நிலை­ய­மான தேசிய பாது­காப்பு பணி­யக கட்­ட­டத்­துக்குள் ஊடு­வி­யுள்­ள­தாக உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து அந்தப் பிராந்­தி­யத்­துக்­கான வீதிகள் பாது­காப்புப் படை­யி­னரால் மூடப்­பட்­டுள்­ளன.

தாக்­குதல் நடத்­தப்­பட்ட இடத்­தி­லி­ருந்து ஒரு சில நூறு யார்கள் தூரத்தில் அந்­நாட்டு ஜனா­தி­ப­தியின் அலு­வ­லகம் அமைந்­துள்­ளது. இது மூர்க்­கத்­த­ன­மான தாக்­குதல் என குற்­றஞ்­சாட்­டி­யுள்ள ஜனாதிபதி அலுவலகம், இந்தத் தாக்குதலால் பாதுகாப்பு படையினரின் தீவிரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கான தீர்மானம் பலவீனமடைய மாட்டாது எனத் தெரிவித்துள்ளது.