தீர்ப்பு வழங்காவிட்டால் உண்ணாவிரதம் - பந்துல அதிரடி

Published By: Digital Desk 3

08 Apr, 2019 | 03:24 PM
image

கல்வி அமைச்சராக செயற்பட்ட காலத்திலே இலஞ்சம் பெற்றதாக எனக்கெதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக தீர்ப்பு வழங்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தாம் கல்வியமைச்சராக செயற்பட்ட போது இடம்பெற்றதாக கூறப்படும்  இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டக்கள் தொடர்பான விசாரணைகளில் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறித்து முறைப்பாடு செய்வதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்கு  இன்று திங்கட்கிழமை சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் போது மக்கள் விடுதலை முன்னனியின் மேல்மாகாண சபை உறுப்பினரான மஹிந்த ஜயசிங்க மற்றும் அவரது குழுவினர் நான் கல்லியமைச்சராக செயற்பட்ட போது நாடுபூராகவும் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக்கூட திட்டத்தின்போது மக்கள் நிதி பயன்படுத்தப்பட்டது. இதன்போது நான் இலஞ்ச ஊழலில் ஈடுப்பட்டதாக கூறி எனக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தனர்.

நான் அரசியலுக்கு வந்து 30 வருடங்கள் கடந்துள்ள நிலையிலே எனக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டகளும் இதுவரையில் வெளிவந்ததில்லை.

இந்நிலையிலே இவர்கள் என் மீது சுமத்தியுள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் எனக்கும் என்னை சார்ந்தோருக்கும் பெரும் அவப் பெயரை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அன்று இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட தில்ருக்சி டயஸ் பண்டாரநாயக்கவிற்கும் நான் தெரிவித்தேன் ஆனால் அவர் தற்போது பதவி விலகி உள்ளார். சிலவேளை அவர் பதவியிலே இருந்திருந்தால் இந்த வழக்கு நிறைவு கண்டிருக்கவும் கூடும்.

எனக்கெதிராக 50 சதவீதமேனும் இலஞ்சம் பெற்றுள்ளேன் என குற்றஞ்சாட்டப்பட்டால் நான் காலிமுகத்திடலில் எனது வயிற்றை வெட்டிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்வேன் என குறிப்பிட்ட போதும் இவர்கள் அதற்கும் பல எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆனால் இன்று நான்கு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலே இது வரையும் இது தொடர்பான எந்த விசாரணைகளும் மேற்கொள்ளாமல் இருக்கின்றது.

எனக்கு அரசியலில் ஈடுபடாத பிள்ளைகள் இருக்கின்றனர். இவர்கள் நாட்டுக்குள் தொழில் புரிய வேண்டும் அதன்போது தந்தை திருடன் என்ற அவப்பெயருடன் அவர்களுக்கு சமூகத்திற்கு முகம் கொடுக்கமுடியாது .

இதனால் எனக்கான நீதியினை உடனடியாக பெற்றுக் கொள்வதற்காகவே இன்றைய தினம் இங்கு வருகை தந்தேன், ஆனால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் தலைவரும் , உறுப்பினர்களும் சந்திக்க முடியாது என தெரிவித்தனர்.

பின்னர் செயளாலரை சந்தித்து எனது கோரிக்கைகளை முன்வைத்தேன். அவர் இது தொடர்பான விசாரணைகள் இறுதி கட்டத்தை நெருங்கிவுள்ளதாகவும் , இதற்கான தீர்ப்பு தொடர்பான விசாரணைகளே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அவருக்கு நான் இது குறித்த தீர்ப்புகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வதாகவும் தெரிவித்தேன் என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44