777 ஆவது நாளாக  போரடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்  ;அமெரிக்காவை தலையிடுமாறு கோரிக்கை

Published By: Digital Desk 4

06 Apr, 2019 | 06:52 PM
image

தமது உறவுகளுக்கு என்ன நடந்தது..?, அவர்கள் எங்கே..? என 777 ஆவது நாளாக வவுனியாவில் போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகளுக்கான நீதியைப் பெற அமெரிக்கா தலையிட வேண்டும் என வலியுறுத்தி இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா, ஏ9 வீதி, வீதி அதிகார சபை முன்பாகவுள்ள அவர்களது போராட்ட கொட்டகை முன்பாக இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இராணுவத்தினர் ஒப்படைத்த தமது பிள்ளைகளை தேடி 777 நாட்களாக போராடி வருகினறோம். அரசாங்கமும் சரி, எமது தமிழ் அரசியல்வாதிகளும் சரி எமக்கு தீர்வைப் பெற்று தரவில்லை. நாம் இந்த அரசாங்கத்திலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் நம்பிக்கையிழந்துள்ளோம். 

எமக்கான தீர்வை பெறறுத் தர அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் தலையிட வேண்டும். நாம் அமெரிக்காவை தலையிட கோரி ஒன்றரை இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ளோம். இன்னும் ஒன்றரை இலட்சம் கையெழுத்து பெற்று மூன்று இலட்சம் கையெழுத்துக்களுடன் அமெரிக்காவுக்கு அனுப்பவுள்ளோம் என இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்கள், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனின் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47