(க.கமலநாதன்)

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைக்கு அமைவாக பொலிஸ்மா அதிபராக பூஜித ஜயசுந்தர பதவி உயர்த்தப்பட்டுள்ளார் என்பது உண்மைக்கு புறம்பான விடயம். மாறாக ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைவாகவே அவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் குறித்த பேரவையில் இருக்கின்றமையினாலேயே சட்ட அனுமுறைகளை பின்பற்றாது தனிப்பட்ட தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. எனவே அமைச்சர்  சம்பிக் ரணவகவை உடனடியாக பதவி நீக்குமாறு தூய்மையான ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தூய்மையான ஹெல உருமயவின் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.