வட கொரிய தலைவர் கிம் யொங் உன் மேற்குலக கலாசாரம் நாட்டில் பரவுவதை தடுக்க ஜீன்ஸ் ஆடைகளை அணிவதற்கும் முகத்தில் அலங்காரமாக துளையிடுவதற்கும் தடை விதித்துள்ளார்.

மேற்படி நாடளாவிய தடைகளானது சீனாவுக்கு அண்மையிலுள்ள யங்காங் மாகாணம் மற்றும் வட ஹம்கையொங் மாகாணம் என்பவற்றை இலக்கு வைத்து விதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வட கொரிய தொழிலாளர்கள் கட்சியின் 7 ஆவது கூட்டத்தையொட்டியே விதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஆசிய பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.