தொண்டமானைக் காணும்போது சிலருக்கு அச்சம் தொற்றிக்கொள்கிறது - முத்து சிவலிங்கம்

Published By: Daya

05 Apr, 2019 | 05:46 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

தோட்டத்துக்கு மின்சாரத்தை பெற்றுக்கொடுத்தது எமது கட்சியாகும். அதனால் இருண்டவனுக்கு காண்பதெல்லாம் பேய் போன்று சிலருக்கு தொண்டமானை காணும்போதெல்லாம் அச்சம் ஏற்படுகின்றது  என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

அதனால்தான் அவரை விமர்சிக்கின்றனர். நாங்கள் யாரையும் விமர்சிக்கமாட்டோம். எமது மக்கள் எந்த நோக்கத்துக்கு எம்மை பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்களோ அதனை நிறைவேற்றிக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் நிதி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட மக்களுக்கு என்ன செய்திருக்கின்றது என்று இன்று சிலர் கேள்வி கேட்கின்றனர். 80 ஆண்டுகாலமாக எமது கட்சி என்ன செய்தது என்பதை தெரியாமல்தான் இவர்கள் இவ்வாறு கேட்கின்றனர். தோட்ட மக்களுக்கு பிரஜா உரிமையை பெற்றுக்கொடுத்தது முதல் அரச தொழில்வாய்ப்புக்களை எமது கட்சியே ஆரம்பமாக பெற்றுக்கொடுத்தது என்பதை இவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அத்துடன் நாங்கள் அன்று ஆரம்பித்த வேலைத்திட்டங்களையே தற்போதுள்ளவர்கள் மேற்கொண்டுவருகின்றனர். தோட்டத்தில் படித்த பிள்ளைகளுக்கு ஆசிரியர் தொழிலை ஆரம்பமாக பெற்றுக்கொடுத்தது தொண்டமானாகும். 83 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்துடன் எமது மக்களை ஒருநிலைப்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்று கருதி அன்று ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆருடன் கலந்துரையாடி, ஆரம்பமாக 242 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. 

அத்துடன் வீடுகள் கட்டுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் தோட்ட மக்களுக்கு ஆரம்பமாக செளமியமூர்த்தி தொண்டமான் மற்றும் பெ. சந்திரசேகரன் போன்றவர்களே தனிவீடுகளும் மாடிவீடுகளும் கட்டிக்கொடுத்தார்கள் என மேலும் தெரிவித்துள்ளார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38