பொலிஸாரின் சமயோசிதத்தால் தாக்குதல் கும்பலைச் சேர்ந்த இருவர் மடக்கிப்பிடிப்பு !

Published By: R. Kalaichelvan

05 Apr, 2019 | 12:00 PM
image

வீதியில் வந்த காரொன்றை மறித்து தாக்க முற்பட்ட குழுவொன்று, அக்காரில் வந்த பொலிசாரை கண்டவுடன் தப்பியோடிய நிலையில்  தாக்குதல் கும்பலில் இருவரை பொலிசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

சாவகச்சேரி சங்கத்தானை பெருங்குளம் வீதியில் உள்ள வீடொன்றுக்கு விருந்தினர் ஒருவர் காரில் வந்துள்ளார். அதன் போது காரை பின் தொடர்ந்து வந்த குழுவினர் , குறித்த நபர் காரை வீட்டின் முன் நிறுத்தி விட்டு வீட்டுக்குள் செல்ல முற்பட்ட போது , காரை பின் தொடர்ந்து வந்த குழுவினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

அதனை அடுத்து குறித்த நபர்,கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து காரில் தப்பி சென்றுள்ளார். அதனை தொடர்ந்தும் அந்த கும்பல் அப்பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்ததுடன் , வீட்டிற்குள் புகுந்து வீட்டின் கண்ணாடிகளையும் அடித்து நொருக்கியுள்ளது. 

அதேவேளை காரில் தப்பிச் சென்ற நபர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ததை தொடர்ந்து பொலிசார் விசாரணைக்காக குறித்த நபருடன் அவரது காரில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். 

அதன் போது அங்கிருந்த கும்பல் , மீண்டும் கார் அவ்விடத்திற்கு வருவதை கண்ணுற்று காரின் மீது தாக்குதல் மேற்கொள்ளும் நோக்குடன் வந்து காரினை மறித்த போது காரினுள் இருந்து பொலிசார் இறங்குவதனை கண்ணுற்று , அதிர்ச்சி அடைந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடினர். 

எனினும்  தப்பியோடிய கும்பலை துரத்திச் சென்ற பொலிசார் இருவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை தப்பி சென்ற ஏனையவர்களையும் கைதுசெய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15