இலங்கையில் ஓரினச் சேர்க்கை மூலமே அதிகளவு எயிட்ஸ் நோய் பரவுவதாக  பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 

இவ் வருடத்தின் கடந்த 3 மாதங்களுக்குள் மாத்திரம் 70 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் எனவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 25 தொடக்கம் 46 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் 100க்கு 70 வீதமானோர் ஆண்கள் என்றும் சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் எயிட்ஸ் நோய் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.