புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் புத்திஜீவிகள் அமைப்பு குற்றச்சாட்டு

Published By: Vishnu

04 Apr, 2019 | 06:05 PM
image

(நா.தனுஜா)

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் உண்மையான நோக்கம் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பது அல்ல. மாறாக இந்த ஊழல் நிறைந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதைத் தடுப்பதே அதன் நோக்கமாகும் என்று தேசிய புத்திஜீவிகள் அமைப்பு சாடியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய புத்திஜீவிகள் அமைப்பைச் சேர்ந்தவரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான அனில் ஜயந்த கூறுகையில், 

பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் ஆதரிக்கின்றோம். அதேவேளை அதற்குப் பதிலாக அரசாங்கம் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்ற புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயங்களை உள்ளடக்கியுள்ளது. இப்புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் ஊடாக பாதுகாப்புப் படையினர், பொலிஸாருக்கு அதிகளவிலான அதிகாரங்கள் வழங்கப்படும் அதேவேளை, பொதுமக்களின் உரிமைகள் பாதிக்கப்படும். 

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதை விடுத்து, தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கே முயன்று வருகின்ற நிலையில், மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். அரசாங்கம் முழுவதும் ஊழல் நிறைந்த அரசாக மாறியுள்ளது. அவ்வாறிருக்க எதிர்வரும் காலங்களில் மக்கள் தமக்கு எதிராகக் கிளர்ந்து எழுவதனைத் தடுக்கும் நோக்கிலேயே புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22