ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரத்தை நம்பவேண்டாம்- அவுஸ்திரேலிய தீவிரவாதி

Published By: Rajeeban

04 Apr, 2019 | 03:10 PM
image

உலகநாடுகளில் உள்ள முஸ்லீம்களை ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரத்தை நம்பவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஐஎஸ் அமைப்பின்  உறுப்பினர் ஒருவர்  முஸ்லீம்களை தங்கள் சொந்தநாடுகளிலேயேயிருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்

சிட்னியை சேர்ந்த மகிர் அப்சர் அலாம் என்ற ஐஎஸ் உறுப்பினரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்

குர்திஸ் ஆயுத குழுவினர் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி பகுதி மீது தாக்குதல் மேற்கொண்டவேளை  மகிர் அலாமையும் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கைதுசெய்துள்ளனர்

24 வயது பல்கலைகழக மாணவரான அவர் 2014 இல் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் இணைந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்

ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபுர் பக்கர் பக்தாதியின் உரையை செவிமடுத்தே நான் ஐஎஸ் அமைப்புடன் இணைந்தோம் என  அவர் குறிப்பிட்டுள்ளார்

அவர்கள்  என்னை போரிடுமாறு  வற்புறுத்தினார்கள் என்னால் போரிடமுடியவில்லை  என தெரிவித்துள்ள அவா மற்றொரு அவுஸ்திரேலிய ஐஎஸ் உறுப்பினரான தரக் ஹம்லேயுடன் இணைந்து ஐஎஸ் மருத்துவமனையில் பணியாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்

மருத்துவமனைகளில் மிகவும் பயங்கரமான விடயங்களை பார்த்ததாக குறிப்பிட்டுள்ள அவர் ஐஎஸ் நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற சம்பவங்களை வர்ணித்துள்ளார்

நான் இரத்த ஆறு ஓடுவதை பார்த்திருக்கின்றேன்  என தெரிவித்துள்ள மிகவும் சாதாரண காரணங்களிற்காக பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவதையும் பார்த்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஐஎஸ் ஆதரவாளர்களிற்கான தனது செய்தியில் அந்த அமைப்பின் பிரச்சாரம் தவறானது என்பதை புரிந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்

எனினும் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் வீழ்ச்சியடைய தொடங்கியவேளை எனது வேட்கை முடிவிற்கு வந்தது என அவர் தெரிவித்துள்ளார்

நான் தப்பியோட முயன்றேன் முடியவில்லை எங்கு பார்த்தாலும் மரணம் நான் சிக்கிக்கொண்டேன் என அவர் தனது தற்போதைய நிலை குறித்து தெரிவித்துள்ளார்

ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரங்கள்  குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

அவர்களது பிரச்சாரம் தவறானது என்பது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள  ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் அவர்களின் நாடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்

கைதுசெய்யப்பட்டுள்ள ஏனைய அவுஸ்திரேலிய ஐஎஸ் உறுப்பினர்களை போன்று அலாமும் நாடு திரும்பவிரும்புவதாக தெரிவித்துள்ளார்

நான் தண்டனையை அனுபவிக்க தயாராகவுள்ளேன், நாடு திரும்புவதற்காக எதனையும் செய்ய தயாராகவுள்ளேன்,என தெரிவித்துள்ள அவர் தான் அவுஸ்திரேலியாவிற்கு சென்றால் அந்த நாட்டிற்கு ஆபத்து  என தெரிவிக்கப்படுவதையும் நிராகரித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07