சுன்னாகம் அனல் மின்னிலையத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Published By: Digital Desk 4

04 Apr, 2019 | 02:20 PM
image

யாழ்ப்பாணம், சுன்னாகம்  அனல் மின்னுற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் சுற்றாடல் மாசடைவினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து நிலையத்ததை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு நஷ்டஈட்டை வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதற்க‍மைய, குறித்த அனல் மின்நிலையத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 மில்லியன் ரூபாவை நஷ்டஈட்டு தொகையாக வழங்குமாறு குறித்த மின்உற்பத்தி நிலையத்தை நிர்வகித்துவரும் தனியார் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 40,000 ரூபாவுக்கும் குறையாத நஷ்டஈட்டுத் தொகையை செலுத்த வேண்டும் எனவும் இதன்போது நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த உத்தரவுகளை அமுல்படுத்தும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யுமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு உயர்நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில், சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்திற்கு எதிரான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சூழல் மற்றும் கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தலைவர் ரவீந்திர குணவர்தன காரியவசம் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சுன்னாகம் அனல் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறும் எண்ணெய் மற்றும் கிறீஸ் ஆகியன குறித்த பிரதேசத்திலுள்ள கிணறுகளில் கலப்பதால் நீர்மாசடைவதன் ஊடாக குறித்த பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாக தெரிவித்து கடந்த 2015 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், மின்னுற்பத்தி செயற்பாடுகளுக்கு 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், வட மாகாண சபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினர் இந்த அடிப்படை மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02