16 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி - ஐதராபாத்

Published By: Vishnu

04 Apr, 2019 | 11:43 AM
image

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 16 ஆவது லீக் ஆட்டம்  டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கிடையில் இடம்பெறவுள்ளது.

இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு டெல்லியில் ஆரம்பாகவுள்ளது.

இத் தொடரில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 2 வெற்றியையும், 2 தோல்வியையும் சந்தித்துள்ளது.

அதேபோல் ஐதராபாத் அணி இதுவரை மூன்று போடிகளில் விளையாடி 2 வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது.

இந்த ஆட்டத்தைப் பொருத்த வரையில் இரு அணிகளுமே தங்களின் 3-ஆவது வெற்றிக்காக மோதுகின்றன. எனினும், டெல்லி அணி முந்தைய ஆட்டத்தில் பஞ்சாபிடம் தோல்வி கண்டதால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. 

மறுபுறம், பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் வென்ற வேகத்துடன்  டெல்லியை எதிர்கொள்கிறது ஐதராபாத். 

டெல்லி அணியை பொருத்த வரையில் துடுப்பாட வீரர்கள் நிலைத்தன்மையுடன் ஆட வேண்டியுள்ளது. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒன்றன் பின்னொன்றாக அடுத்தடுத்து ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ரபாடா, டிரென்ட் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் பந்து வீச்சில் ஐதராபாத்துக்கு சவால் விடும் வகையில் உள்ளனர்.

அதேபோல் ஐதராபாத் அணியிலும் டெல்லிக்கு பதிலடி கொடுக்கும் வகையிலான வீரர்கள் உள்ளனர். குறிப்பாக டேவிட் வார்னர் மற்றும் பெயர்ஸ்டோவின் ஆரம்ப இணைப்பாட்டம் அணிக்கு பலம் பெருந்திய ஒன்றாகவே உள்ளது.

பந்து வீச்சிலும் ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான், மொஹமட் நபி, சந்தீர் சர்மா ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் டெல்லி அணி 4 போட்டிகளிலும், ஐதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

டெல்லியில் நான்கு போட்டியில் இவ் விரு அணிகளும் மோதியுள்ளன. அதில் ஐதராபாத் அணி 3 போட்டிகளிலும், டெல்லி அணி ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35