ஜனாதிபதியின் கூற்று நகைப்புக்குரியது.!

Published By: Robert

19 Apr, 2016 | 10:58 AM
image

தன­வந்­தர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கி சாதா­ரண மக்கள் மீது 'வற்' வரியை அதி­க­ரிக்கும் அர­சாங்­கத்தி வரிக் கொள்கையை எதிர்க்க மக்கள் அணிதிர­ள வேண்டும் என முன்­னிலை சோச­லிஷ கட்­சியின் பிர­சாரச் செய­லாளர் புபுது ஜாகொட தெரி­வித்தார். மக்­களை பாதிக்கும் வகையில் வற் வரி அற­வி­டு­வதை அனு­ம­திக்­கப் போ­வதில் ­லை­யென்ற ஜனா­தி­ப­தியின் கூற்­றா­னது.

நகைப்­புக்­கு­ரி­யது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

முன்­னிலை சோச­லிச கட்சி நேற்று கொழும்பில் நடத்­திய விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

நாடு பொரு­ளா­தார ரீதியில் பாரிய கஷ்­டத்தை எதிர்­கொண்­டுள்­ளது. இதனை சமா­ளிக்கும் வகையில் அர­சாங்கம் சர்­வ­தேச நாணய நிதி­யத்தில் இருந்து கடன் தொகையை கோரி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் 36 மாதங்­களில் மீள­ளிக்கும் வகையில் 1.2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களை வழங்க சர்­வ­தேச நாணய நிதியம் இணங்­கி­யுள்­ளது.

என்­றாலும் இந்த கடன் தொகையை 3பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­வரை அதி­க­ரிக்­கு­மாறு அர­சாங்கம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது. இதற்­கான பேச்சு வார்த்­தையில் கலந்­து­கொள்­வ­தற்­காக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மற்றும் மத்­திய வங்­கியின் ஆளுனர் அர்ஜுன் மகேந்­திரன் ஆகியோர் வொஷிங்­ட­னுக்கு பய­ண­மா­கி­யுள்­ளனர்.

மேலும் அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் அமெ­ரிக்க டொலர் 3 பில்­லியன் கிடைத்­தாலும் எதிர்­வ­ரக்­கூ­டிய 12மாதங்­க­ளுக்கு நாட்டின் கடன் மற்றும் வட்டி தவ­ணையை செலுத்­து­வ­தற்கு மாத்­திரம் அமெ­ரிக்க டொலர் 4.5 மில்­லியன் தேவைப்­ப­டு­வ­தாக மத்­திய வங்­கியின் பிரதி ஆளுனர் டபிள்யூ.ஏ.சிறி­வர்த்­தன தெரி­வித்­துள்ளார். இவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச நாணய நிதி­யத்­தியம் மற்றும் ஏனைய நிறு­வ­னங்­க­ளிடம் கடன் பெறு­வதை தவிர வேறு வழி­யில்லை.

அத்­துடன் சர்­வ­தேச நாணய நிதியம் இந்த கடன் தொகையை வழங்­கு­வ­தற்கு சில நிபந்­த­னை­களை விதித்­துள்­ளது. குறிப்­பாக வரவு செலவு திட்­டத்தில் அர­சாங்­கத்தின் மொத்த தேசிய வரு­மா­னத்தில் 5.4 வீதத்­துக்கு மேல் செல்­லாமல் அர­சாங்­கத்தின் செல­வுகள் குறைக்­கப்­ப­ட­வேண்டும் எனவும் வரி முறை­மையில் மாற்றம் ஏற்­ப­டுத்த வேண்டும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிபந்­த­னைக்­க­மை­யவே அர­சாங்கம் வரவு செலவு திட்­டத்தில் 30அமைச்­சுக்­களின் மூல­தன செலவை குறைப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது. அதில் கல்வி, சுகா­தாரம், விவ­சாயம், தொழில்,போக்­கு­வ­ரத்து, கிரா­மிய அபி­வி­ருத்தி, மக­வெலி போன்ற அமைச்­சுக்கள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

அதே­போன்று அர­சாங்கம் கடந்த வரவு செலவு திட்­டத்தில் வரி முறை­மையில் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் தன­வந்­தர்­க­ளி­ட­மி­ருந்து கூடு­த­லான வரி அற­விடும் முறையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. என்­றாலும் கடந்த மாதம் பிர­தமர் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய விசேட உரையில் தன­வந்­தர்­க­ளுக்கும் சாதா­ரண மக்­க­ளுக்கும் வரி அதி­க­ரிக்­கப்­படும் என தெரி­வித்­தி­ருந்தார்.

ஆனால் அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்கு வரி விதி­வி­லக்­க­ளிக்­கப்­படும் என தெரி­வித்த போதும் அந்த பொருட்கள் தொடர்பில் அர­சாங்கம் இது­வரை எந்த அறி­வித்­தலும் விடுக்க வில்லை. இவ்­வா­றான நிலையில் எதிர்­வரும் 2ஆம் திக­தி­முதல் வரி அதி­க­ரிக்­கும்­போது சகல பொருட்­க­ளி­னதும் விலை அதி­க­ரிக்­கப்­படும்.

அத்­துடன் அர­சாங்கம் கடந்த வரவு செலவு திட்­டத்தில் தன­வந்­தர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­திய மூல­தன வரி,மாளிகை வரி அவர்­களின் எதிர்ப்பின் கார­ண­மாக நீக்­கி­யி­ருக்­கின்­றது. ஆனால் வற் வரி 15வீதத்­தினால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளதால் சாதா­ரண பொது மக்­களே கூடு­த­லாக பாதிக்­கப்­படப் போகின்­றனர்.

அத்­துடன் எதிர்­வரும் 2ஆம் திகதி முதல் வற் வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக நிதி அமைச்சு அறி­வித்­துள்ள நிலையில், மக்கள் பாதிக்கும் வகை­யி­லான வரி அதி­க­ரிப்­புக்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்­லை­யென ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். வற் வரி 15வீதத்தால் அதி­க­ரிக்­கப்­போ­வ­தாக பிர­தமர் பாரா­ளு­மன்­றத்தில் ஒரு மாதத்­துக்கு முன்­னரே தெரி­வித்­துள்ளார். இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் இந்த கூற்றானது நகைச்சுவையாகவே இருக்கின்றது.

நாட்டின் கடன் தொகையை குறைப்பதற்காக சாதாரண மக்கள் மீது சுமையை சுமத்த முற்படும் அரசாங்கம் அமைச்சர்களின் வரப்பிரசாதங்களை குறைப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே தனவந்தர்களுக்கு நிவாரணம் வழங்கி சாதாரண மக்கள் மீது வற் வரி அதிகரிக்கும் அரசாங்கத்தின் வரி கொள்கையை எதிர்க்க மக்கள் அணி திரளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46