திருமண விளம்பரம் மூலம் பெண்ணை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த கதி

Published By: Daya

04 Apr, 2019 | 11:51 AM
image

திருமணம் செய்வதாகத் தெரிவித்து 9 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்து தப்பி ஓடிய சந்தேநபர் ஒருவரை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பத்திரிகை ஊடாக விளம்பரப்படுத்தி திருமணம் செய்வதாகக்கூறி 9 இலட்சம் ரூபா பணத்தை இளம் பெண்ணின் குடும்பத்திடம் பெற்று மோசடி செய்த இளைஞனை ஒரு வாரத்துக்கு விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறத்தித்துள்ளது. 

முறைப்பாட்டாளரிடம் பெற்றுக்கொண்ட 9 இலட்சம் ரூபா பணத்தை முழுமையாக மீளச் செலுத்தவேண்டும் என்று எச்சரித்த நீதிமன்று, அதுவரை பிணை வழங்கப்படமாட்டாது எனச் சுட்டிக்காட்டி சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

1989 ஆம் ஆண்டு பிறந்த நெல்லியடியைச் சேர்ந்த மணமகனுக்கு மணமகள் வேண்டும் என்று  பத்திரிகையில் வெளியாகிய விளம்பரத்தை பார்த்த இளவாலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அதில் குறிப்பிட்டப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை சமுர்த்தி அலுவலகர் என அறிமுகப்படுத்திய இளைஞன் நேரிலும் அந்தக் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். தனக்கு தாய், தந்தையர் இல்லை என தெரிவித்துள்ளார். 

இளைஞனுக்கு இந்த மாதம் திருமணம் செய்து வைக்க இளம் பெண்ணின் குடும்பத்தினர் தயார்படுத்திய நிலையில் அவர்களிடம் வீடு கட்டுவதற்கு வேண்டும் என சீதனத்தில் முற்பணமாக 9 இலட்சம் ரூபா பணத்தை அந்த இளைஞன் கேட்டு வாங்கியுள்ளார்.

பணத்தைப் பெற்ற இளைஞன் சில நாட்களின் பின் தொடர்பில்லாமல் போக அந்தக் குடும்பத்தினர் காங்கேசன்துறை சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நெல்லியடி பொலிஸ் பிரிவில் குற்றம் சாட்டப்பட்டவர் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். அத்துடன் விளம்பரம் வெளியிட்ட பத்திரிகையின் ஊடாக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அராலியில் வைத்துக் கைதுசெய்துள்ளனர்.

நெல்லியடியில் பிறந்த சந்தேகநபர் தனது மூத்த சகோதரனுடன் வாழ்ந்து வருபவர் என்பதுடன் அவர் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சந்தேகநபர் 1991 ஆம் ஆண்டே பிறந்தவர் என்று கண்டறியப்பட்டது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தியுள்ளனர்.  

வழக்கை விசாரித்த நீதிமன்று, சந்தேகநபரை முறைப்பாட்டாளரிடம் பெற்ற பணத்தை மீளச் செலுத்த முடியுமா? என கேட்டது. அதற்கு உரிய பதில் சந்தேகநபரால் வழங்கப்படாததால் அவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08