குழந்தைக்கு பாதிப்பில்லையென கூறியும், பிரசவத்தின்போது தலை தனியே, உடல் தனியே பிரிந்து பிறந்த குழந்தை

Published By: J.G.Stephan

04 Apr, 2019 | 09:00 AM
image

திருகோணமலை, கிண்ணியா பகுதியை அண்டிய முக்கிய வைத்தியசாலையொன்றில், குழந்தை ஒன்றின் உடல் இரண்டாக பிரிந்து பிறந்துள்ளது.

39 வயதுடைய கர்ப்பிணிப் பெண் கடந்த செவ்வாயன்று, கிண்ணியாவின், குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரசவத்தின் போது குழந்தை தலை வேறாகவும், உடல் வேறாகவும் பிரிந்து பிறந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மகப்பேற்று பரிசோதனைக்காக வைத்தியரை சந்தித்தபோது, குழந்தைக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரசவத்திற்கு 24ஆம் திகதியும் குறித்துக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு, செவ்வாய் கிழமையன்று குழந்தை பிரசவிப்பதற்கான வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்தே வைத்தியசாலையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியர்கள், சுகபிரசவத்திற்காக குழந்தையை வெளிநோக்கி இழுத்துள்ளனர். இதன்போது உடல் வேறாகவும், தலை வேறாகவும் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், குழந்தை ஒரு கிழமைக்கு முன் இறந்துள்ளதென தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், ஒரு கிழமைக்கு முன்னர் குழந்தை இறந்திருந்தால் பிரசவ வலி எப்படி வந்திருக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

குழந்தையின் சடலம் தற்போது பிரதே பரிசோதனைக்காக பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01