அமைதியாக ஆரம்பித்து இறுதியில் அதிரடி காட்டிய மும்பை

Published By: Vishnu

03 Apr, 2019 | 10:36 PM
image

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 170 ஓட்டங்ளை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 15 ஆவது லீக் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

மும்பை அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக டீகொக் மற்றும் ரோகித் சர்மா துடுப்பெடுத்தாடிவர மூன்றாவது ஓவரை எதிர்கொண்ட டீகொக் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசினார். எனினும் அவர் அடுத்த பந்தில் அந்த நான்கு ஓட்டத்துடனே ஆட்டமிழந்து வெளியேற மும்பை அணி முதல் விக்கெட்டை 8 ஓட்டத்துக்கு பறிகொடுத்தது.

தொடர்ந்து 2 ஆவது விக்கெட்டுக்காக ரோகித் சர்மாவுடன் கைகோர்த்தாடி வந்த சூர்யகுமார் யாதவ் 5 ஆவது ஓவரை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டங்களை அடுத்தடுத்து விளாசித் தள்ள மும்பை அணி முதல் ஐந்து ஓவர்களின் நிறைவில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் 39 ஓட்டங்களை பெற்றது.

ரோகித் சர்மா 9 ஓட்டத்துடனும் சூர்யகுமார் யாதவ் 24 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடிவர, 8 ஆவது ஓவருக்காக ஜடேஜா பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரை எதிர்கொண்ட ரோகித் சர்மா, ஜடேஜாவின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மாவையடுத்து களமிறங்கி துடுப்பெடுத்தாடிய யுவராஜ் சிங்கும் 8.3 ஆவது ஓவரில் ராயுடுவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க மும்பை  அணி 50 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

நான்காவது விக்கெட்டுக்காக சூரியகுமார் யாதவ் மற்றும் குருநல் பாண்டியா கைகோர்த்தாடிவர மும்பை அணி 15.4 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடக்க, 17 ஆவது ஓவரை எதிர்கொண்ட குருநல் பாண்டியா அந்த ஓவரின் 2,3, ஆவது பந்தில் இரண்டு நான்கு ஓட்டங்களை அடுத்தடுத்து பெற்றார். எனினும் நான்காவது பந்தில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்க, அந்த ஓவரின் 5 ஆவது பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார் ஒரு ஆறு ஓட்டத்தை விளாசி, அரைசதம் கடந்தார்.

இந் நிலையில் 17 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அவர் மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 8 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 59 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

6 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்தாடிய பாண்டியாவும், பொலர்ட்டும் இறுதி ஓவரில் அதிடிகாட்ட மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில்170 ஓட்டங்களை குவித்தது.

இறுதி ஓவருக்காக இவர்கள் இருவரும் இணைந்து 29 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், பாண்டியா 25 ஓட்டத்துடனும், பொலார்ட் 17 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.  

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் ஜடேஜா, சாஹர், மொகிட் சர்மா, இம்ரான் தாகீர் மற்றும் பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனால் சென்னை அணியின் வெற்றிக்கு 171 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

நன்றி ; ஐ.பி.எல்.இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35