“சிறைச்சாலைகளில் போதைப்பொருளை கட்டுப்படுத்தினால்  நாட்டில் 75 வீதமான குற்றச்செயல்களைத் தடுக்க முடியும்”

Published By: Digital Desk 4

03 Apr, 2019 | 07:47 PM
image

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்தப்படுமாக  இருந்தால் நாட்டில் 75 வீதமான குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதமர் சிறை காவலர் என். பிரபாகரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் ஏப்ரல் 3 போதையற்ற நாடு எனும் தொனிப்பொருளிளான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு  யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய போதே யாழ்ப்பாணம்  சிறைச்சாலையின் பிரதம காவலர் என்.பிரபாகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்

.

“நாம் இன்றைய தினம் போதைப் பொருளை ஒழிப்போம் போதை பொருளை கட்டுப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் சத்தியபிரமாணத்தை மேற்கொண்டுள்ளோம். எனினும் அந்த சத்திய பிரமாணத்தை வாயளவில் நாங்கள் உச்சரித்துவிட்டு செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

எனவே நாம் சிறைச்சாலைக்குள் இந்த போதை பொருளை ஒழிப்போமாக இருந்தால் நாட்டில் 75 வீதமான குற்றச்செயல்களைக்  கட்டுப்படுத்த முடியும் என நான் நம்புகின்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வானது  யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் உதவி அதியட்சகர் எம்.எல்.மலின் லோவின் ஆலோசனையில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்ச்கர் எம்.எப்.லாகீரின் வழிகாட்டலில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதான காவலர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19