இன்று ஆரம்பமாகின்றது 19 வயதிற்குட்பட்டோருக்கான மாகாண கிரிக்கெட் தொடர்

Published By: Priyatharshan

19 Apr, 2016 | 09:40 AM
image

இங்­கி­லாந்­திற்கு சுற்றுப் பயணம் மேற்­கொள்­ள­வுள்ள இலங்கை அணியில் 19வய­திற்­குட்­பட்ட வீரர் ஒரு­வரை இணைத்­துக்­கொள்­வ­தான, 19 வய­திற்­குட்­பட்ட மாகா­ணங்­க­ளுக்­கி­டை­யி­லான சுப்பர் 19 கிரிக்கெட் சுற்றுப் போட்டி இன்று ஆரம்­ப­மா­கின்­றது.

இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் ஏற்­பாட்டில் நடை­பெறும் 19 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­கி­டை­யி­லான இந்தப் போட்டித் தொடரில் வடக்கு மாகாணம், வடமேல் மாகாணம், ஊவா மாகாணம், மேற்கு மாகாணம், மேற்கு மாகாணம் வடக்கு, கிழக்கு மாகாணம், மத்திய மாகாணம், வட மத்திய மாகாணம், தெற்கு மாகாணம் மற்றும் மேற்கு மாகாணம் தெற்கு ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய 10 அணிகள் விளையாடுகின்றன.

இந்தத் தொடரின் முதல் போட்­டியில் கிழக்கு மாகாண அணியும் மத்­திய மாகாண அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன. இந்தப் போட்டி களுத்துறை சர்ரே மைதானத்தில் நடைபெறுகின்றது.

இதில் கிழக்கு மாகாண அணியின் தலை­வ­ராக ஆர்.தேனு­ரதன் செயற்­ப­டு­கிறார். அதேபோல் மத்­திய மாகாண அணிக்கு அஸித்த அணித் தலை­வ­ராக செயற்­ப­டு­கிறார்.

இன்று நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது போட்­டியில் ஊவா மாகாண அணியும் வடக்கு மாகாண அணியும் பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன. இதில் வடக்கு மாகாண அணிக்கு ஜெனி பிள­மினும்இ ஊவா அணிக்கு அவிந்து தீக்­ச­னவும் அணித் தலை­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றனர்.

இந்தப் போட்டி மாட்டா கொடை மைதானத்தில் நடை பெறவுள்ளது. இன்று ஆரம்­ப­மாகும் இந்தப் போட்டி மே மாதம் 12ஆம் திகதி வரை நடை­பெ­று­கின்­றது.

இந்தத் தொடரின் ஆரம்பச் சுற்­றுகள் அனைத்தும் 2 நாள் போட்­டி­யாக நடை­பெ­று­கின்­றன. இதன் இறுதிப் போட்­டி 3 நாள் போட்­டி­யாக நடை­பெ­று­கின்­றது.

இந்தத் தொடரில் துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு என அனைத்து துறை­களிலும் பிர­கா­சிக்கும் வீரர், நேர­டி­யாக இலங்கை தேசிய அணியில் இடம்­பி­டிப்­ப­தற்­கான வாய்ப்பை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் அமைத்துக் கொடுத்­துள்­ளது. அது­மட்­டு­மன்றி தெரி­வு­செய்­யப்­படும் வீரர் இங்கிலாந்திற்கு எதிராக நடைபெறவுள்ள போட்டித் தொடரிலும் பங்குகொள்ளும் வாய்ப்பையும் பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41