முதுகு தண்டுவட பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகளுக்கான நவீன சத்திர சிகிச்சை

Published By: Daya

09 Apr, 2019 | 08:28 PM
image

உலகம் முழுவதும் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் எட்டு குழந்தைகள் முதுகு தண்டுவட பாதிப்புடன் பிறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் தெற்காசியாவில் ஆண்டுதோறும் இத்தகைய பாதிப்புடன் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இவர்களை குணப்படுத்துவதற்கான நவீன சத்திர சிகிச்சையும் அறிமுகமாகியுள்ளது.

பெண்கள் பேறுகாலத்தின் போது வயிற்றில் இருக்கும் சிசுக்களின் ஆரோக்கியத்திற்காக பல்வேறு வகையிலான உணவு வகைகளை எடுத்துக் கொள்கின்றனர். இருப்பினும் சிலர் வைத்தியர்களின் அறிவுரைகளையும் மீறி சில வலி நிவாரணி மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கின்றனர்.

அதேபோல் கருவுற்ற தாய்மார்கள் சிசுக்களின் வளர்ச்சிக்காகவும், அவர்களின் ஆரோக்கியத்திற்காகவும், பல்வேறு சிகிச்சைகளையும் மகப்பேறு வைத்திய நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்கின்றனர்.

இருந்தாலும் அறியப்படும் மற்றும் அறியப்படாத பல காரணங்களால், கர்ப்ப காலத்தின் போது பல குழந்தைகளுக்கு முதுகு தண்டுவடம் முறையாக வளர்ச்சி பெறுவதில்லை. அதன் காரணமாக முதுகுத்தண்டுவடப் பகுதியின் சில இடங்களில் பிளவோ அல்லது விரிசல்களோ ஏற்பட்டுவிடும். 

அதுபோன்ற குழந்தைகள் பிறந்த பிறகு உடலளவில் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் தற்போது அதிநவீன சிகிச்சைகள் மூலம் இத்தகைய பிரச்சனைகளுடன் குழந்தை பிறப்பதற்கு முன்னே அதாவது கருவில் இருக்கும் போதே, கரு முனை நரம்பியல் சத்திர சிகிச்சை என்று அழைக்கப்படும் நவீன சத்திர சிகிச்சைகள் மூலம் இது சீராக்கப்படுகிறது.

தாயின் கர்ப்பப்பையில் உள்ள சிசுவின் வளர்ச்சி சரியாக இல்லையெனில், இத்தகைய சிகிச்சைகளை அளிக்கலாம் என்றும்,  இத்தகைய சிகிச்சை மையங்கள் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் உள்ள ஒரு சில தனியார்  வைத்தியசாலைகளில் அறிமுகமாகியிருக்கிறது. 

இதன் மூலம் முதுகு தண்டுவட வளர்ச்சி குறைபாட்டின் காரணமாக பிறக்கின்ற குழந்தைகளை குணப்படுத்த இயலும் என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29