யாழில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை ?

Published By: Digital Desk 4

03 Apr, 2019 | 11:47 AM
image

யாழ்ப்பாணம், கரவெட்டிப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கற்றலைக் கருத்தில் கொண்டு இரவு வேளைகளில் இரு மணித்தியாலங்களுக்கு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கரவெட்டிப் பிரதேச சபையின் சிறப்பு அமர்வு நேற்றுத் தவிசாளர் தலைமையில் நடைபெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமர்வில் கேபிள் தொலைக்காட்சி இணைப்புக் கம்பங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவாதம் நடைபெற்றது.

கேபிள் தொலைக்காட்சிக் கம்பங்கள் நடுதல், அது தொடர்பான அனுமதி பெறுதல் என்பவற்றில் இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். நினைத்த இடத்தில் கம்பங்களை நட்டு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. முறையான அனுமதியைப் பெற்றுச் சபையின் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று அவற்றை நட வேண்டும் என்று விவாதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கம்பங்கள் நடுவதில் உள்ள சிக்கல் நிலமைபோன்று மாணவர்களின் கல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் குறிப்பாக 7 மணி முதல் 9 மணிவரை வரிசையாகத் தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தக் குறிப்பிட்ட நேரம் மாணவர்கள் கற்கும் நேரம். 9 மணிக்கு நாடங்கள் நிறைவடைய மாணவர்கள் உறக்கத்துக்குச் செல்லும் நிலையே இப்போது உள்ளது. இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

கரவெட்டிப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கற்றலைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணி முதல் 9 மணி வரை கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை விதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. 

கேபிள் இணைப்புக் கம்பங்கள் நடுவதற்கு சபையின் அனுமதியைப் பெற வேண்டியிருப்பதால் அதற்கான அனுமதி மற்றும் வருடாந்த அனுமதியை வழங்கும்போது இந்த அறிவுறுத்தலை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51