அலுகோசு பதவி ; 102 விண்ணப்பங்கள் ; நேர்முகத் தேர்வுக்கு 79 பேர் தெரிவு

Published By: Daya

03 Apr, 2019 | 11:43 AM
image

மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில் 79 பேர் நேர்முகத்தேர்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நேர்முகத்தேர்வுக்காக 20 வயது இளைஞன் ஒருவன் உட்பட 79 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தெரிவுசெய்யப்பட்டுள்ளவர்களுள் பட்டதாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 12 மற்றும் 22 ஆம் திகதிகளில் இந்த நேர்முகத் தேர்வு இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவேளை, அலுகோசு பதவிக்காக அமெரிக்க பிரஜை ஒருவர் உட்பட 102 விண்ணப்பங்கள் கிடைத்திருந்த நிலையில், அதிலிருந்து 79 விண்ணப்பதாரிகளை நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேர்முகப் பரீட்சையின் பின்னர் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவுசெய்யப்படுவர்.

இந்தநிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியல் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

இதேவேளை மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதியும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55