வட மாகாண பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டமைக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.