சுரேஷ் ரெய்னா புதிய சாதனை 

Published By: R. Kalaichelvan

01 Apr, 2019 | 01:16 PM
image

இந்திய அணி வீரரான சுரேஸ் ரெய்னா இருபதுக்கு - 20 போட்டிகளில் 6 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதலாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.12 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு - 20 போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.  இதில் நேற்றையதினம் சென்னையில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பெடுத்தாடும் போதே சுரேஷ் ரெய்னா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டியில் ரெய்னா 36 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், உனட்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரெய்னாவால் பெரிதாக விளையாட முடியாவிட்டாலும், இந்திய இருபதுக்கு - 20 அரங்கில் ரெய்னா புதிய வரலாறு படைத்தார்.

ரெய்னா 36 ஓட்டங்களைப் பெற்றபோது, இந்தியாவில் இடம்பெற்ற இருபதுக்கு - 20 போட்டிகளில் மொத்தம்  6 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.

இருபதுக்கு - 20 போட்டிகளைப் பொறுத்தவரை சுரேஷ் ரெய்னா இதுவரை ஒட்டுமொத்தமாக 288 இன்னிங்ஸ்களில் விளையாடி 8,058  ஓட்டங்களை சேர்த்துள்ளார்.

இதில் ஐ.பி.எல். போட்டிகளில் 179 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா சிஎஸ்கே அணிக்காக மட்டும் 150 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

அண்மையில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, ரெய்னா, ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ஓட்டங்களை அடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல். போட்டிகளைப் பொறுத்தவரை சுரேஷ் ரெய்னா 175 போட்டிகளில் 5,070 ஓட்டங்களை சேர்த்துள்ளார். இதன் சராசரி 34.75 ஆகும். இதில் மீதமுள்ள 1,605 ஓட்டங்களை இந்தியாவுக்காக விளையாடியபோது ரெய்னா எடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21