வீடு தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதம்

Published By: R. Kalaichelvan

01 Apr, 2019 | 09:59 AM
image

அயல் வீடுகளுக்கும் தீ பரவும் அபாயம் மட்டக்களப்பு தீயணைப்புப் பிரிவினரின் துரித கதி நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது.

ஏறாவூர் நகரில் நேற்று இரவு இடம்பெற்ற தீவிபத்துச் சம்பவமொன்றில் வீடும் அதன் உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகர மத்தி முனைவளவு வீதியை அண்டியுள்ள வீடொன்றே தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீட்டில்  நீண்ட காலமாக வசித்து வந்த  வாடகைக் குடியிருப்பாளர்கள் சம்பவ தினத்திற்கு முதல்நாள் ஏறாவூரிலிருந்து தம்பாளை எனும் ஊருக்குச் சென்றிருந்த வேளையிலேயே வீட்டில் எவரும் இல்லாமல் வீடு பூட்டப்பட்டுக் கிடந்த நிலையில் வீடு தீப்பற்றிக் கொண்டுள்ளது.

தீ சுவாலை விட்டு எரியத் துவங்கியதும் விபரீதம் நடப்பதை அறிந்து கொண்ட அயலவர்கள் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து மட்டக்களப்பு மாநகர சபையிலிருந்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

கூடவே, அயலவர்களும் பொதுமக்களும் தன்னார்வலர்களும் ஏறாவூர் நகரசபையினரும் ஸ்தலத்திற்கு விரைந்து ஏனைய வீடுகளுக்கும் தீ பரவாமல் தீயை அணைக்கும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ ஊர் முழுக்கப்பரவக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ஊரின் ஆற்றங்கரையோரப் பகுதியில் பெரும் பரபரப்புக் காணப்பட்டது.

தீப்பற்றிய இச்சம்பவத்திற்கான காரணம்பற்றி உடனடியாக விவரம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02