யாழில் பயங்கரம் ; கொலை முயற்சியிலிருந்து தெய்வாதீனமாக மீட்கப்பட்ட சிறுவன்

Published By: Digital Desk 4

31 Mar, 2019 | 04:51 PM
image

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 6:45 மணியளவில் சிறுவன்  மீது கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுளளது. எனினும் தெய்வாதீனமாக சிறுவன் காப்பாற்றப் பட்டுள்ளான். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது. கடந்த 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த சிறுவனது குடும்பம் கட்டைக்காடு தேவாலயத்திற்க்கு 4:00 மணியளவில் சென்று 6:45 மணியளவில் வழிபாடுகள் நிறைவு செய்துவிட்டு  குறித்த சிறுவனை தவிர அனைவரும் வீடு திரும்பியதாகவும் சிறுவன்  தேவாலயத்தில் உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு  15 நிமிடம் தாமதித்து வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தேவாலயத்தில் நின்றுள்ளான்.

 பின்னர் குறித்த சிறுவன் 15 நிமிடம் கழித்து தமது வீட்டிற்கு வராமையால் வழமையாக பிற்பகல் வேளை சிறுவனது அம்மம்மா வீட்டில் படம் பார்ப்பதாகவும் அங்கே இருக்கிறானோ தெரியாது என்று அங்கு சிறுவனது பெற்றோர் சென்றபோது சிறுவனது கை மற்றும் கால் கட்டப்பட்டு கழுத்தை சுற்றியும் துணியால் மிக இறுக்கமாக சுற்றப்பட்டு வாயிற்க்குள்ளும் துணிகள் திணிக்கப்பட்டு சுய நினைவின்றி வீட்டின் பின் பகுதியில் காணப்பட்டுள்ளான்.

இந்நிலையில் உடனடியாக சிறுவனை பெற்றோர் மீட்டு ஆம்யூலன்ஸ் வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு நேற்று பிற்பகல் வீடு திரும்பியதாகவும் குறித்த சிறுவனது தாயார் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவன் தெரிவிக்கையில், தான் தேவாலயத்தில் இருந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது தனது அம்மம்மா வீட்டிற்க்குள் யாரோ இனந்தெரியாதவர்கள் செல்வதை அவதானித்ததாகவும் அவர்களை பின்தொடர்ந்து அங்கு சென்றபோது யாரோ தனக்கு பின்னால் நின்று மூக்கில் ஏதோ துணியால் பொத்தியதாகவும் அதற்கு பின்னர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் சிறுவன் தெரிவித்தான். 

மேலும்  சிறுவனது அம்மம்மா வீட்டில் சிறுவனை தூக்கில்  போடுவதற்க்காக என சந்தேகிக்கப்படும் வகையில் வீட்டிற்க்குள் கயிறு ஒன்று போடப் பட்டுள்ளதாகவும் தாயர் மேலும் தெரிவித்தார். 

இது தொடர்பாக கிளிநொச்சி வைத்தியசாலை பொலிசார் மற்றும் பளை பொலிஸார் கிராம சேவகர் ஆகியோருக்கு   முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் இதுவரை யாரும் குறித்த சம்பவம் தொடர்பில் எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் பெற்றோர் தெரிவித்தனர். 

மேலும் குறித்த சம்பவத்தால் கட்டைக்காடு கிராமத்தில் சிறுவர்கள் மிகவும் பயந்த சூழலில் காணப்படுவதாகவும் மக்கள்  தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31